உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாராமெடிக்கல் மாணவர்களுக்கு மாநில விளையாட்டு போட்டி

பாராமெடிக்கல் மாணவர்களுக்கு மாநில விளையாட்டு போட்டி

கோவை : எஸ்.என்.எஸ்., கல்லுாரியில் நடக்கும் பாராமெடிக்கல் கல்லுாரிகளுக்கு இடையேயான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் மாணவர்கள் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.எஸ்.என்.எஸ்., பாராமெடிக்கல் கல்லுாரி சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் எஸ்.என்.எஸ்., டெக் கல்லுாரியில் நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 2500க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் இப்போட்டியில் பங்கேற்றுள்ளனர்.மாணவ மாணவியருக்கு வாலிபால், கோ கோ, கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, கபடி, டென்னிகாய்ட், த்ரோபால் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன.நேற்று நடந்த போட்டி முடிவுகள்: மாணவியருக்கான கோ கோ காலிறுதிப்போட்டியில் எஸ்.என்.எஸ்., கல்லுாரி அணி 20 - 2 என்ற புள்ளிக்கணக்கில் இந்துஸ்தான் கல்லுாரி அணியை வீழ்த்தியது. த்ரோபால் காலிறுதிப்போட்டியில் எஸ்.என்.எஸ்., கல்லுாரி அணி 2 - 0 என்ற செட் கணக்கில் அபிராமி கல்லுாரி அணியை வீழ்த்தியது.மாணவர்கள் பிரிவு கால்பந்து இரண்டாம் சுற்றுப்போட்டியில் யுனைடெட் கல்லுாரி அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் பி.ஜி.பி., நிர்சிங் கல்லுாரி அணியை வீழ்த்தியது. கபடி மூன்றாம் சுற்றில் கோபி வெங்கடேஷ்வரா கல்லுாரி அணி 26 - 22 என்ற புள்ளிக்கணக்கில் ஈரோடு பார்மசி அணியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை