உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு தினம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்

சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு தினம் மரக்கன்றுகள் நட்டு கொண்டாட்டம்

கோவை:சர்வதேச சதுப்பு நில காடுகள் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு, கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் சார்பில், மரக்கன்றுகள் நடப்பட்டன.வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனத்தில் செயல்படும், சுற்றுச்சூழல் தகவல் பரப்பு மையம்( இ.ஐ.ஏ.சி.பி.), சார்பில், ராமநாதபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தடாகம் அரசு மாணவர் உயர்நிலைப் பள்ளிகளில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.இ.ஐ.ஏ.சி.பி., மூத்த திட்ட அதிகாரி, விக்னேஷ்வரன், 'தாயின் பெயரில் ஓர் மரம்' பிரசாரம் குறித்து விளக்கினார். உள்நாட்டு மரங்களை நடுவது, சுற்றுச்சூழலை மேம்படுத்துவது, பருவநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டம், பல்லுயிர்ப் பெருக்கம் ஆகியவை குறித்தும் விளக்கினார்.மாணவர்களின் பங்களிப்பு எவ்வளவு சிறிதாக இருப்பினும், சூழலியலில் அவற்றின் தாக்கம் பெருமளவு இருக்கும் எனக் கூறி, மாணவர்களை ஊக்குவித்தார்.பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. விழிப்புணர்வு வினாடி வினா நடத்தப்பட்டது. பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ