உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இரண்டாவது நாளாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

இரண்டாவது நாளாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவில்பாளையம்:கோரிக்கையை வலியுறுத்தி, இரண்டாவது நாளாக ஆசிரியர்கள் நேற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடக்கக் கல்வித் துறையில், பணியாற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமையை பாதிக்கும், பள்ளிக் கல்வித் துறையின் அரசாணை எண் 243ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோ ஜாக்) சார்பில், அனைத்து வட்டார கல்வி அலுவலர் அலுவலகங்கள்முன், மூன்று நாட்கள் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக உயர் மட்ட குழு அறிவித்தது.இரண்டாவது நாளாக, நேற்றும், எஸ்.எஸ்.குளம் வட்டார கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 'டிட்டோ ஜாக்' அமைப்பின் ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜ் தலைமை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. வட்டாரச் செயலாளர் ரமேஷ் குமார், உள்பட துவக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramki
ஜூலை 10, 2024 16:47

இந்த ஜாக்டோஜியோ கும்பல்தான் உள்கட்ட கசமுச செய்து விடியா ஆட்சிக்கு வழி வகுத்தது. ஆனால் இப்போதோ ஊளையிட்டு கதறுகிறது.


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை