உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கே.ஐ.டி., கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

கே.ஐ.டி., கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கு

கோவை;கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியில், ஐ.இ.இ.இ., சென்னை பிரிவு சார்பில், அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் மேலாண்மை தொடர்பான சர்வதேச கருத்தரங்கு நடந்தது. இதில், 'இஸ்ரோ' முன்னாள் ஆலோசகர் மற்றும் விஞ்ஞானி ரங்கநாதன் வருதப்பன் பங்கேற்று , நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் விண்வெளி ஆராய்ச்சியின் பங்கு, விண்வெளி ஆய்வு தொழில்நுட்பங்கள் குறித்தும், புதிய விண்வெளி திட்டங்கள் ஆராய்ச்சிகள் குறித்தும் விளக்கமளித்தார். இதில், பல்வேறு கல்லுாரிகளில் இருந்து பங்கேற்ற, ஆராய்ச்சியாளர்கள் 938 ஆய்வு கட்டுரைகளை சமர்ப்பித்தனர். காருண்யா பல்கலை இ.சி.இ., துறைத்தலைவர் நிர்மல், பெங்களூர் டெக்னிக்கல் இவாஜலிஸ்ட் இன்டல் கார்ப்பரேஷன் நிறுவனத்தை சேர்ந்த ஸ்ரீராம் வாசுதேவன், கல்லுாரி முதல்வர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி