உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாவட்ட கூடைப்பந்து போட்டிசிறப்பாக விளையாடிய சிறுவர்கள்

மாவட்ட கூடைப்பந்து போட்டிசிறப்பாக விளையாடிய சிறுவர்கள்

கோவை;ராஜலட்சுமி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் பள்ளி மாணவ - மாணவியருக்கு '3ம் ஆண்டு ஸ்ரீ நவக்கோடி நினைவு கோப்பைக்கான' மாவட்ட கூடைப்பந்து போட்டி நேரு ஸ்டேடியம் அருகில் உள்ள மாவட்ட கூடைப்பந்து கழக மைதானத்தில் நடக்கிறது.மாணவ - மாணவியருக்கு 13 மற்றும் 16 வயதுக்கு உட்பட்டோர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படுகின்றன.நேற்று நடந்த போட்டி முடிவுகள் :சிறுமியர் பிரிவில் சுகுணா பிப்ஸ் அணி 23 - 3 என்ற புள்ளிக்கணக்கில் சின்மயா பள்ளியையும், யுனைடெட் கூடைப்பந்து கழக அணி 36 - 10 என்ற புள்ளிக்கணக்கில் பி.எஸ்.ஜி., சர்வஜனா பள்ளியையும் வீழ்த்தின.யூத் பாய்ஸ் பிரிவில் ராஜலட்சுமி மில்ஸ் அணி 69 -25 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்.வி.ஜி.வி., அணியையும், யங் பிளட் அணி 50 - 25 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்பைஸ் அணியையும், பாரதி மெட்ரிக்., பள்ளி அணி 52 - 25 என்ற புள்ளிக்கணக்கில் பொள்ளாச்சி என்.பி.சி., அணியையும் வீழ்த்தின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை