| ADDED : ஜூலை 15, 2024 12:39 AM
கோவை;வெளிநாட்டில் இருந்து வந்தவரிடம், திருட்டில் ஈடுபட்ட மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை சூலுார் கண்ணம்பாளையத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 22. புரூனே நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறார். கடந்த, 11ம் தேதி கோவை வந்தார். மறுநாள் தனது நண்பர்களுடன், உக்கடம் வாலாங்குளம் பைபாஸில், நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மூவர், தமிழ்செல்வன் மற்றும் அவரது நண்பரை தாக்கி, மொபைல்போன் பறித்தனர்.தொடர்ந்து, அவரது கூகுள்பே வாயிலாக, ரூ.2,800 ஐ பறித்துக் கொண்டனர். தமிழ்செல்வனை மிரட்டி, செல்வபுரம் பை-பாஸ்க்கு அழைத்துச் சென்று, முக்கால் பவுன் செயின், வாட்ச் ஆகியவற்றை பறித்து தப்பினர்.தமிழ்செல்வன் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் விசாரித்தனர். விசாரணையில் கோவையை சேர்ந்த, ரியாஸ், 29, தாலிப், 25 மற்றும் ஒருவர் எனத் தெரிந்தது. தலைமறைவாக உள்ள மூவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.