உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சந்தன மரம் கடத்த முயன்றவர்கள் கைது

சந்தன மரம் கடத்த முயன்றவர்கள் கைது

பெ.நா.பாளையம் : துடியலூர் அருகே கதிர்நாயக்கன் பாளையத்தில் உள்ள சி.ஆர்.பி.எப்., வளாகத்தில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற, 10 பேரை துடியலூர் போலீசார் கைது செய்தனர்.கதிர்நாயக்கன்பாளையம் சி.ஆர்.பி.எப்., வளாகத்தில் ஹாவில்தார் ராஜேஷ்குமார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது, அங்குள்ள சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற சேலம் மாவட்டம், வாழப்பாடியை சேர்ந்த ராமச்சந்திரன், 36, கந்தசாமி, 47, குமார், 41, மணி, 36, மாரப்பன்,38, வரதராஜன், 38, சதாசிவம், 38, சுப்ரமணி, 36, ஹரி,38, சத்யராஜ், 32, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து சந்தன மர கட்டைகள், மரம் அறுக்கும் பிளேடுகள், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதானவர்கள், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை