| ADDED : ஜூலை 18, 2024 12:16 AM
கோவை: வரதராஜபுரம் தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு பள்ளியில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுத்திருவிழா நாளை துவங்குகிறது. இதில் பங்கேற்க அனுமதி இலவசம். தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு பள்ளியின் விளையாட்டுக்குழு சார்பில், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு, 29ம் ஆண்டு விளையாட்டுத் திருவிழா, நாளை முதல் 21ம் தேதி வரை நடக்கிறது. இதில் மாணவ - மாணவியருக்கு கோ-கோ, கபடி, பூப்பந்து, கூடைப்பந்து, வாலிபால் உள்ளிட்ட போட்டிகள் 14, 17 மற்றும் 19 ஆகிய பிரிவுகளில் நடத்தப்படுகின்றன. இப்போட்டியில், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். கட்டணம் எதுவும் இல்லை. பங்கேற்க விரும்பும் பள்ளி அணிகள், 97866 44455, 99408 88495 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.