மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
4 hour(s) ago
நாளைய மின்தடை
4 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
4 hour(s) ago
ஆனைமலை;ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழைக்கு மரங்கள் விழுந்து, மின்கம்பங்கள் சேதமடைந்தன.பொள்ளாச்சி, ஆனைமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.இடைவிடாமல் ஒரு மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழையால், கடந்த இரு மாதங்களாக நிலவிய கோடை வெயிலும், அனல் காற்றும் தணிந்துள்ளது. இதனால், மக்கள் நிம்மதியடைந்தனர்.ஆனைமலை, 18வது வார்டு கலாமுருகன் என்பவரது வீடு மழைக்கு விழுந்தது. மேலும், வேட்டைக்காரன்புதுாரில் தென்னை மரங்கள் சாய்ந்ததில், மின்கம்பங்கள் சேதமடைந்தன. ஆனைமலை பகுதியில் உள்ள தோட்டங்களில், தென்னை மரத்தின் மட்டைகள், தென்னை மரங்கள் சாய்ந்து கிடந்தன. சுப்பேகவுண்டன்புதுார், சின்னப்பம்பாளையம், பெத்தநாயக்கனுார், பெரியபோது, மீன்கரை ரோடு, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் ரோட்டில் விழந்த மரங்களை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர்.ஆனைமலை சுற்றுப்பகுதில் பல இடங்களில், மின்பாதையில் மரங்கள் விழுந்ததால், மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் நேற்று சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.
4 hour(s) ago
4 hour(s) ago
4 hour(s) ago