உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கோவை;அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு கோவை அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லுாரி டீன் நிர்மலா மற்றும் துணை முதல்வர் சுஜாதா நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.தொடர்ந்து கல்லுாரி வளாகத்தில் மரக்கன்று களை நட்டுவைத்து, அதன் வளர்ச்சிக்கு உதவும் வகையில் சொட்டுநீர் பாசனத்தை உருவாக்கினர். டீன் நிர்மலா, சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டிய முக்கியத்துவத்தையும், கடமைகளையும் மாணவர்களிடையே எடுத்து கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை