உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / திரவுபதி அம்மன் கோவிலில் வள்ளி கும்மியாட்டம்

திரவுபதி அம்மன் கோவிலில் வள்ளி கும்மியாட்டம்

ஆனைமலை:ஆனைமலை திரவுபதி அம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், வள்ளி கும்மியாட்டம் நடந்தது.ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில், குண்டம் திருவிழா கடந்த, 9ம் தேதி துவங்கியது. நேற்றுமுன்தினம் குண்டம் இறங்கும் நிகழ்வு நடந்தது.தொடர்ந்து, ஆனைமலை திரவுபதி அம்மன் கலைக்குழுவினர் சார்பாக, வள்ளி கும்மியாட்டம் நடைபெற்றது. கோவில் அறங்காவலர் செந்தில்வேல் தலைமை வகித்தார்.ஆனைமலை பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். கோவில் செயலாளர் அப்பாதுரை பேசினார்.கலைக்குழுவினர் ஆசிரியர் விக்னேஷ்விஜய் குருவான ராமசாமி தலைமையில், 100க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகள், வள்ளி கும்மி நடனமாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை