உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வார்டு வாரியாக உறுப்பினர்கள் கூட்டம் தி.மு.க., நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு

வார்டு வாரியாக உறுப்பினர்கள் கூட்டம் தி.மு.க., நிர்வாகிகளுக்கு அதிரடி உத்தரவு

கோவை;கோவை மாநகர் மாவட்ட தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம், டாடாபாத்தில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். துணை செயலாளர் அப்பாஸ், பொருளாளர் முருகன் முன்னிலை வகித்தனர். கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது:கோவையில் உள்ள அனைத்து வார்டு வாரியாக பொதுக்குழு கூட்டம் நடத்த வேண்டும். அந்தந்த வார்டில் கட்சியில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கிறார்களோ, அவ்வளவு பேரையும் வரவழைத்து கூட்டம் நடத்த வேண்டும். அவர்கள் கூறும் குறைகள் மற்றும் யோசனைகளை பதிவிட்டு, தீர்மானங்கள் நிறைவேற்ற வேண்டும். இக்கூட்டங்களை மூன்று நாட்களுக்குள் நடத்தி முடிக்க வேண்டும். வார்டு கிளை கூட்டம், சார்பு அணி கூட்டங்களுக்கு மாவட்ட கழகத்தில் இருந்து பார்வையாளர்கள் வருவர். பகுதிக் கழகம் மற்றும் மாநகர் மாவட்டம் சார்பில் நடத்தப்படும் கூட்டங்களுக்கு, தலைமையில் இருந்து நியமிக்கப்படும் பார்வையாளர்கள் வருவர்.இக்கூட்டங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள், கட்சி தலைமையில் இருந்து இணைய தள 'லிங்க்'கில் பதிவேற்றம் செய்ய வேண்டும். தலைமை கழக நிர்வாகிகள் அவற்றை ஆய்வு செய்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பர். செப்., 15க்குள் அனைத்து கூட்டங்களையும் நடத்தி முடித்து அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு, தி.மு.க., நிர்வாகிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை