உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  என்ன சாதிக்கப்போகிறோம் இப்போதே நிர்ணயிக்கணும்

 என்ன சாதிக்கப்போகிறோம் இப்போதே நிர்ணயிக்கணும்

கோவை : ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரியில், 2024-25ம் கல்வியாண்டின், அனைத்து துறையின் இளங்கலை மாணவர்களுக்கு, வரவேற்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக, சின்னத்திரை நகைச்சுவை கலைஞர் ஈரோடு மகேஷ் கலந்துகொண்டார்.அவர் பேசுகையில், ''கல்லுாரி காலத்தில் என்ன சாதிக்க போகிறோம் என்று, மாணவர்கள் நிர்ணயம் செய்துகொள்ள வேண்டும். அந்த இலக்கை நோக்கி உழைக்க வேண்டும். பல்துறை அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும்,'' என்றார்.ரத்தினம் கல்விக்குழுமத் தலைவர் மதன் செந்தில், கல்விக்குழும செயலாளர் மாணிக்கம், இயக்குனர் ஷீமா, துணைத்தலைவர் நாகராஜ், முதல்வர் பாலசுப்பிரமணியன், துணைமுதல்வர் சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி