உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மனைவி கொலை; கணவன் கைது

மனைவி கொலை; கணவன் கைது

சூலூர் : தேனி மாவட்டம் கமுதியை அடுத்த பேரையூரை சேர்ந்த முனியசாமி மகன் தர்மராஜ், 45. இவரது மனைவி உமா 38; கூலித் தொழிலாளிகள். தற்போது, கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அடுத்த பூராண்டாம்பாளையத்தில் தங்கி சாமிநாதன் என்பவரின் தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். உமா இடது கால் ஊனமானவர்.தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தர்மராஜ் பிளாஸ்டிக் பைப்பால் உமாவை சரமாரியாக தாக்கி, தலையை சிமென்ட் கம்பத்தில் மோதியதாக கூறப்படுகிறது. பலத்த காயமடைந்த உமா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாமிநாதன் அளித்த புகாரின் பேரில், போலீசார் சடலத்தை மீட்டனர். தர்ம ராஜை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை