உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அட்சயா அகாடமியில் யோகாசன போட்டி

அட்சயா அகாடமியில் யோகாசன போட்டி

கோவை;கோவை அட்சயா அகாடமி சீனியர் செகண்டரி சி.பி.எஸ்.இ., பள்ளியில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.இதில், 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் சூரிய நமஸ்காரம், பர்வதாசனம், பாத அஸ்தாசனம், பத்ம புஜங்காசனம், அஷ்ட உகட்டாசனம், சர்வங்காசனம் கோமுகாசனம் போன்ற ஆசனங்களை பயிற்றுநர்களிடம் இருந்து கற்றுக்கொண்டனர்.வகுப்பு வாரியாக யோகாசன போட்டிகள் நடத்தப்பட்டன. மாணவர்கள் ஆர்வமுடன் போட்டிகளில் கலந்து கொண்டனர். பள்ளியின் நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராம், முதல்வர் ராஜேஸ்வரி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி