உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதமர் மோடி ரோடு ஷோ 2,000 பேர் பங்கேற்க முடிவு

பிரதமர் மோடி ரோடு ஷோ 2,000 பேர் பங்கேற்க முடிவு

அன்னுார்:அன்னுார் வட்டாரத்தில் இருந்து, பிரதமர் மோடி பங்கேற்கும் 'ரோடு ஷோ'வில், 2,000 பேர் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது.பிரதமர் மோடி 18ம் தேதி (இன்று) கோவை ஆர். எஸ்.புரத்தில், இரண்டு கி.மீ., தூர பிரசார 'ரோடு ஷோ'வில் பங்கேற்கிறார். இதையடுத்து இந்த 'ரோடு ஷோ'வில் பங்கேற்பதற்கான ஆலோசனைக் கூட்டம் அன்னுார் வடக்கு ஒன்றிய பா.ஜ., அலுவலகத்தில் நடந்தது. பா.ஜ., வட்டார தலைவர் திருமூர்த்தி தலைமை வகித்தார். விவசாய அணி மாவட்ட தலைவர் விஜயகுமார், கட்சி மாவட்ட செயலாளர் ஜெயபால் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் அன்னுார் பேரூராட்சி மற்றும் வடக்கு ஒன்றியத்தில் இருந்து ஆயிரம் பேர் இருசக்கர வாகனம், கார் மற்றும் வேன்களில் பங்கேற்க முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய பொதுச் செயலாளர்கள் ஈஸ்வரன், முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தெற்கு ஒன்றியத்தில் வட்டாரத் தலைவர் ரத்தினசாமி தலைமையில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தெற்கு ஒன்றியத்திலிருந்து ஆயிரம் பேர் பிரதமர் மோடி தலைமையிலான 'ரோடு ஷோ'வில் கலந்து கொள்ள முடிவு செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை