உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குழந்தை கடத்தும் கும்பலா? போதை நபர்கள் மூவர் கைது

குழந்தை கடத்தும் கும்பலா? போதை நபர்கள் மூவர் கைது

பொள்ளாச்சி;பொள்ளாச்சியில், குழந்தை கடத்த வந்த நபர் என நினைத்து, வாலிபரை தாக்கிய, குடிபோதையில் இருந்த மூவரை கிழக்கு போலீசார் கைது செய்தனர்.துாத்துக்குடி மாவட்டம் தட்டன்குளம் அருகே, நடுவன் குறிச்சியை சேர்ந்தவர் விக்னேஷ்,29. இவர், பொள்ளாச்சியில் தனியார் பழக்கடையில் வேலை செய்து வருகிறார்.நேற்று முன்தினம் இரவு, தங்கியிருந்த அறையில் இருந்து இவர் கடைக்கு சென்றார். அப்போது, தன்னாசியப்பன் கோவில் வீதி அருகே குடிபோதையில் இருந்த மூவர், விக்னேைஷ வழிமறித்து உன்னை பார்த்தால் குழந்தை கடத்த வந்த நபர் போல தெரிகிறது எனக்கூறி தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், அந்த பகுதியை சேர்ந்த சிலரும், அவரிடம் தகராறு செய்தனர்.இதுகுறித்து, விக்னேஷ் கொடுத்த புகாரின் பேரில், கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, நகராட்சி துாய்மை பணியாளர் தம்பன் என்கிற ராஜேந்திரன்,35, கருப்புசாமி, 34, மற்றும் அதே பகுதியை சேர்ந்த குணசேகரன்,25, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை