மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
12 hour(s) ago
நாளைய மின்தடை
12 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
12 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
12 hour(s) ago
மேட்டுப்பாளையம்:நிரம்பி வழியும் நகராட்சி கழிப்பிடத்தை, சுத்தம் செய்ய டெண்டர் விட்டு, ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் சுத்தம் செய்யவில்லை. காரமடை நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. இதில், 27 வது வார்டு கவுன்சிலராக அ.தி.மு.க.,வை சேர்ந்த வனிதா உள்ளார். இந்த வார்டில் சைக்கிள்கார ராமசாமி வீதியில், நகராட்சி பொது கழிப்பிடம் உள்ளது.இதிலிருந்து கழிவு நீர் வெளியேறி வருகிறது. இதை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கவுன்சிலர் வனிதா மன்ற கூட்டத்தில் கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால் இன்னும் கழிவு நீரை அகற்ற, நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. இது குறித்து வார்டு கவுன்சிலர் வனிதா கூறியதாவது: நகராட்சி பொதுக் கழிப்பிடத்திலிருந்து வெளியேறும் கழிவு நீர், அப்பகுதியில் உள்ள காலியிடத்தில் தேங்கியுள்ளது. இதனால் சுற்றியுள்ள வீடுகளின் சுவர்களில் காரைகள் இடிந்து விழுகிறது.கடந்த ஆறு மாதங்களுக்கு முன், கழிப்பிடத்திலிருந்து கழிவு நீரை வெளியேற்ற, 2.70 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டது. டெண்டர் எடுத்தவர் ஆறு மாதங்கள் ஆகியும், இன்னும் கழிவு நீரை அகற்றவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago
12 hour(s) ago