உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தட்டை பயிறு விதைப்பண்ணை: விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு

தட்டை பயிறு விதைப்பண்ணை: விதைச்சான்று உதவி இயக்குனர் ஆய்வு

பொள்ளாச்சி:அரசம்பாளையம் தட்டைபயிறு விதைப்பண்ணையை கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நர்கீஸ் ஆய்வு செய்தார்.கிணத்துக்கடவு தாலுகா அரசம்பாளையத்தில் தட்டை பயிறு (வம்பன் 3) தரமான விதைப்பண்ணையை, கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் நர்கீஸ் ஆய்வு செய்தார்.கோவை விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் கூறியதாவது:தரமான தட்டைப்பயிறு விதை உற்பத்திக்கு, அதே ரகம் மற்றும் பிற ரக பயிரிலில் இருந்து வயலை சுற்றி, ஐந்து மீட்டர் இடைவெளியை கடைப்பிடித்தல் வேண்டும்.இதனால், பயிரின் இனத்துாய்மை பாதுகாக்கப்படும். அக்டோபர் மற்றும் ஜூன் - ஜூலையில் நல்ல மகசூல் எடுக்கலாம்.விதைப்புக்கு முன்பாக அடி உரமாக ெஹக்டேருக்கு, 25 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, 25 கிலோ சாம்பல் சத்து மற்றும், 20 கிலோ சல்பரும் இட வேண்டும்.இரண்டு சதவீதம் டி.ஏ.பி., கரைசலை, பூக்கும் தருணத்தில், 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிப்பது அவசியம். மேலும், பூ உதிர்வதை குறைக்கும் என்.ஏ.ஏ., 40 பிபிஎம் (ஒரு லிட்டரில், 40 மில்லி கிராம்) தெளிக்க வேண்டும்.தட்டை பயிறு விதை நடவு செய்வதன் வாயிலாக, சரியான பயிர்களின் எண்ணிக்கையை பராமரிக்க முடியும். சரியான பயிர்களின் எண்ணிக்கை வயலில் இருந்தால் மட்டுமே அதிகபட்ச மகசூலை பெற முடியும்.வம்பன் 3 என்ற ரகம், ஏக்கருக்கு, 350 முதல், 400 கிலோ வரை இருக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார். பொள்ளாச்சி விதைச்சான்று அலுவலர் நந்தினி, விதை உதவி அலுவலர் மாடசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை