| ADDED : ஜன 18, 2024 12:44 AM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கேரம் கிளப் சார்பில், மாவட்ட அளவிலான கேரம் போட்டி, பல்லடம் ரோடு, கேரள சமாஜம் மண்டபத்தில் நடந்தது. இதில், 54 கிளைச் சங்கங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள், மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.போட்டியானது, ஒற்றையர் பிரிவின் கீழ் நடத்தப்பட்டது. போட்டியைத் தொடர்ந்து, பரிசளிப்பு விழா நடந்தது.கேரள சமாஜம் தலைவர் சோமன்மேத்யூ கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு கோப்பைகள் வழங்கினார். முதல் பரிசாக, 8 ஆயிரம் ரூபாய், இரண்டாவது பரிசாக 5 ஆயிரம் ரூபாய், மூன்று மற்றும் நான்காம் பரிசாக, தலா 2,000 ரூபாய், ஐந்து மற்றும் 6ம் இடம் பிடித்தவர்களுக்கு, தலா, 1000 ரூபாய் வழங்கப்பட்டது.கோவை மாவட்ட கேரம் சங்க தலைவர் ராஜ்குமார், செயலாளர் தங்ககுமார், பொருளாளர் கோவிந்தராஜ், பொள்ளாச்சி கேரம் சங்கத் தலைவர் ராகவன், செயலாளர் விக்கிராஜா பொருளாளர் குப்புசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.