உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லுாரி வளாகத்தில் நுாற்றாண்டு விழா

கல்லுாரி வளாகத்தில் நுாற்றாண்டு விழா

கோவை:அவிநாசி ரோடு, ஜி.ஆர்.ஜி., கிருஷ்ணம்மாள் கல்லுாரி வளாகத்தில், ஜி.ஆர்.ஜி., நிறுவனர் தினம் மற்றும் மறைந்த கல்லுாரியின் நிறுவனர் சந்திரகாந்தியின் பிறந்தநாள் நுாற்றாண்டு விழா நடந்தது.ஜி.ஆர்.ஜி., குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் ரங்கசாமி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர் ராஜஸ்தானின் தருண் பாரத் சங்கத்தின் நிறுவனர் ராஜேந்திர சிங் பேசினார்.கல்லுாரியின் தலைவர் நந்தினி, சந்திரகாந்தி நினைவு வாழ்நாள் சாதனையாளர் விருதை, டில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குநர் சுனிதா நரேனுக்கும், மும்பை, சரணாலயம் இயற்கை அறக்கட்டளையின் நிறுவனர் ரந்தீர் பிட்டு சாகலுக்கு ஜி.ஆர்.ஜி., வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வழங்கி கவுரவித்தார்.ஜி.ஆர்.ஜி., மேலாண்மை கல்வி இயக்குனர் சதாசிவம், கல்லுாரியின் செயலர் யசோதா தேவி, துணை முதல்வர் ஹாரத்தி, கல்லுாரி முதல்வர் மீனா, ஜி.ஆர்.ஜி., சி.ஏ.எஸ்., இயக்குனர் பாலசுப்ரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை