உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை டூ அந்தமான் விமான சுற்றுலா!

கோவை டூ அந்தமான் விமான சுற்றுலா!

கோவை;அந்தமான் தீவை கண்டு மகிழ, இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பில், கோவையில் இருந்து விமான சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பிப்., 11ம் தேதி துவங்கும் இந்த சுற்றுலா ஐந்து நாட்கள், ஆறு பகல் கொண்டதாகும். அந்தமானில் உள்ள போர்ட் பிளேயர், கோர்பின்ஸ் கோவ் கடற்கரை, ஒளி மற்றும் ஒலி காட்சியுடன் சுதந்திரப் போராட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் பெற்ற செல்லுலார் சிறை, ரோஸ்நார்த் பே தீவு, ஹேவ்லாக் தீவு, ஆசியாவின் சிறந்த கடற்கரை, ராதாநகர் கடற்கரை, காலாபதர் கடற்கரை நீலத்தீவு, கடற்கரை சூரிய அஸ்தமனம், இயற்கை பாலம் மற்றும் பரத்பூர் கடற்கரை ஆகிய இடங்களை காணலாம்.ஆறு நாட்கள் சுற்றுலாவுக்கு, 57 ஆயிரத்து 690 ரூபாய்- கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விவரங்கள் மற்றும் முன்பதிவுகளை உடனடியாக தெரிந்து கொள்ள. கோவையில் உள்ள இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக்கழகத்தை, 90031 40655 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை