உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாலிடெக்னிக் கால்பந்துகிறிஸ்து அரசர் சாம்பியன்

பாலிடெக்னிக் கால்பந்துகிறிஸ்து அரசர் சாம்பியன்

கோவை:அனைத்து பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில், கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.சரவணம்பட்டி சங்கரா பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், மண்டல அளவிலான பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கான கால்பந்து போட்டி கல்லூரியில் நடந்தது. கோவை, பொள்ளாச்சி, பழனி, ஊட்டி, குன்னூர் ஆகிய இடங்களை சேர்ந்த 26 பாலிடெக்னிக் கல்லூரிகள் 'நாக்அவுட்' போட்டியில் பங்கேற்றன. இறுதி போட்டியில் கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் கல்லூரி 1-0 என்ற கோல் கணக்கில் ராமகிருஷ்ணா மிஷன் பாலிடெக்னிக் கல்லூரியை வென்றது. முதல் அரை இறுதி போட்டியில் ராமகிருஷ்ணா மிஷன் பாலிடெக்னிக் 1-0 கோல் கணக்கில் பி.எஸ்.ஜி.,பாலிடெக்னிக் கல்லூரியையும், மற்றொரு அரைஇறுதியில் கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் 2-1 கோல் கணக்கில் பொள்ளாச்சி நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியையும் வென்றன. மூன்றாவது இடத்துக்கான போட்டியில் பி.எஸ்.ஜி.,பாலிடெக்னிக் 1-0 கோல் கணக்கில் நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லூரியை வென்றது. முதலிடம் பெற்ற கிறிஸ்து அரசர் பாலிடெக்னிக் கல்லூரி மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றது.சங்கரா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கணேசன் பரிசு வழங்கினார். கல்லூரி உடற்கல்வி இயக்குனர் வேல்முருகன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை