உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கல்லூரி விளையாட்டு தின விழா: திறமை காட்டி அசத்திய மாணவர்கள்

கல்லூரி விளையாட்டு தின விழா: திறமை காட்டி அசத்திய மாணவர்கள்

கோவை:நவ இந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின், 26வது ஆண்டு விளையாட்டு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.இதில் மாணவர்கள் 'ஏ', 'பி', 'சி', 'டி' என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு, 100மீ., 200மீ., 400மீ., 800மீ., 1500மீ., நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட தடகளப்போட்டிகளும், வாலிபால், கூடைப்பந்து, கிரிக்கெட், ஹேண்ட்பால், த்ரோபால், கபடி, டேபிள் டென்னிஸ், செஸ், கேரம், இறகுப்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டு போட்டிகளும் நடத்தப்பட்டன.இதில் திறம்பட செயல்பட்ட, 'சி' மண்டல அணி 192 புள்ளிகள் எடுத்து, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பையை தட்டிச்சென்றது.'ஏ' அணி மாணவர்கள், 119 புள்ளிகள் எடுத்து இரண்டாமிடம் பிடித்தனர். தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை, பி.எஸ்சி., பயோ டெக் மாணவி பிரசன்னா, எம்.பி.ஏ., மாணவர் கவுதம் ஆகியோர் பெற்றனர்.விளையாட்டு தின விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் மல்லர் கம்பம் விளையாட்டை செய்து காட்டி அசத்தினர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, கோவை மண்டல ஜி.எஸ்.டி., நுண்ணறிவுத்துறை துணை இயக்குனர் பிரபாகரன், பரிசுகளை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்