உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனவிலங்குகளால் பயிர்கள் பாதிப்பு...விவசாயிகள் ஆவேசம்!இழப்பீடு வேண்டாம்; தீர்வு தான் தேவை

வனவிலங்குகளால் பயிர்கள் பாதிப்பு...விவசாயிகள் ஆவேசம்!இழப்பீடு வேண்டாம்; தீர்வு தான் தேவை

அன்னுார்:'வன விலங்குகளினால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு வேண்டாம். நிரந்தர தீர்வு தான் வேண்டும்,' என 'அட்மா' கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.அன்னுார் வேளாண் விரிவாக்க மையத்தில், 'அட்மா' திட்டத்தில் வட்டார அளவிலான விவசாயிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. 'அட்மா' தலைவர் முருகேசன் தலைமை வகித்தார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) வெங்கடாசலம் பேசுகையில், ''சிறு தானியங்கள் பயிரிடுவதில் ஆர்வம் காட்டுங்கள். கூடுதல் வருமானம் கிடைக்கும். அதற்கு தேவையான இடு பொருட்கள் மானியத்தில் வழங்கப்படும்,'' என்றார்.வனவர் கோபிநாத் பேசுகையில், ''வனவிலங்குகளை விரட்டுவதற்கு தொடர்ந்து அதிக ஒலி எழுப்பக் கூடிய கருவி தற்போது வெளிச்சந்தையில் உள்ளது. நல்ல பலன் கிடைக்கிறது. தோட்டத்தில் புதர்கள் இருந்தால் அகற்ற வேண்டும். காட்டுப்பன்றி, மயில், யானை ஆகியவற்றால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் ஒரு வாழைக்கு 100 ரூபாய் என ஒவ்வொரு பயிருக்கும் குறிப்பிட்ட அளவு இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பித்து இழப்பீடு பெறலாம்,'' என்றார்.விவசாயிகள் பேசுகையில், 'எங்களுக்கு இழப்பீடு வேண்டாம். நிரந்தர தீர்வு தான் வேண்டும். காட்டுப்பன்றிகள் கூட்டம் கூட்டமாக வருகின்றன. மயில்கள், தக்காளி, மிளகாய் என எந்த பயிரையும் விடுவதில்லை. மான்களும் அதிக அளவில் பயிர்களை சேதப்படுத்துகின்றன. இதனால் பல விவசாயிகள் விவசாயத்தையே விட்டுவிட்டனர்,'' என்றனர்.அல்லப்பாளையம் கால்நடை மருத்துவர் யசோதா பேசுகையில், ''கால்நடை வளர்ப்பில் நிரந்தர நிலையான வருமானம் பெறலாம். கோமாரி நோய் தடுப்பு ஊசி போட்டுக்கொள்ள வேண்டும். கால்நடை வளர்க்கும் இடங்களை சுத்தமாக பராமரிக்க வேண்டும்,'' என்றார்.உதவி வேளாண் வணிக அலுவலர் வினோத் பேசுகையில், ''அன்னுார் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் தேசிய வேளாண் சந்தையின் முகமை செயல் படுகிறது. விவசாயிகள் அங்கு வந்தால் தங்கள் விளைபொருட்களுக்கு நாட்டில் எந்த சந்தையிலும் என்ன விலை என்பதை தெரிந்து கொள்ளலாம். ''கூடுதல் விலை பெறலாம். ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இருப்பு வைத்து நல்ல விலை வரும்போது விற்கலாம்,'' என்றார்.வேளாண் உதவி இயக்குனர் பிந்து, வேளாண் வல்லுனர் சுரேஷ், உதவி வேளாண் அலுவலர் புவனேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை