உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை கிடங்காக மாற்றப்படும் தடுப்பணை; ஊராட்சி நிர்வாகத்தால் வேதனை

குப்பை கிடங்காக மாற்றப்படும் தடுப்பணை; ஊராட்சி நிர்வாகத்தால் வேதனை

உடுமலை : உடுமலை அருகே, நீர்வழிப்பாதை மற்றும் தடுப்பணையை ஊராட்சி நிர்வாகம் குப்பைக்கிடங்காக மாற்றியுள்ளது குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க புகார் மனு அனுப்பியுள்ளனர்.உடுமலை ஒன்றியம், ஜல்லிபட்டி கிராமத்தில், நல்ல தண்ணீர் கிணறு அருகே மழை நீரை சேகரிக்கும் தடுப்பணை உள்ளது.கொங்குரார் குட்டை மலையடிவாரத்தில் துவங்கும் ஓடையில், இருந்து வரும் மழை நீர், இந்த தடுப்பணையில் நிரம்பி, ஏழு குள பாசன திட்ட குளத்துக்கு செல்லும்.பிரதான நீர் வழிப்பாதையாக உள்ள ஓடையிலும், அரசு திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட தடுப்பணையிலும், ஜல்லிபட்டி குடியிருப்பில், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் உட்பட அனைத்து கழிவுகளையும் கொட்டி வருகின்றனர்.ஊராட்சி பணியாளர்களே, நீர் வழிப்பாதையிலும், தடுப்பணையிலும் கழிவுகள் கொட்டுவது அப்பகுதி விவசாயிகளிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம், பல முறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இது குறித்து, அப்பகுதி விவசாயிகள் திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள புகார் மனு: ஜல்லிபட்டியிலுள்ள தடுப்பணை மற்றும் நீர் வழிப்பாதையை ஊராட்சி நிர்வாகம் குப்பைக்கிடங்காக மாற்றி வருகிறது. இதனால், அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு நிலவி, நோய் பரவும் நிலையில் உள்ளது.அதிகளவு பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதால், மழைக்காலத்தில், தடுப்பணைக்கு வரும் நீர், திசை மாறி, குடியிருப்புகள் சென்று சேதம் ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.மேலும், இந்தக்கழிவுகள், தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டு, ஏழு குள பாசன திட்ட குளங்களில், தேங்கும் வாய்ப்புள்ளது. எனவே, திருப்பூர் கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.தடுப்பணை மற்றும் நீர்வழித்தடத்திலுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றவும், மீண்டும் அப்பகுதியில், கழிவு கொட்டுவதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி