உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 4 ஆண்டுக்கு பின் வறண்ட தேவம்பாடி குளம்: நிலத்தடி நீர்மட்டம் சரிவால் கவலை

4 ஆண்டுக்கு பின் வறண்ட தேவம்பாடி குளம்: நிலத்தடி நீர்மட்டம் சரிவால் கவலை

பொள்ளாச்சி:கடந்த, நான்கு ஆண்டுகளுக்கு பின், பொள்ளாச்சி அருகே தேவம்பாடிவலசு குளம் வறண்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.பொள்ளாச்சி அருகே, தேவம்பாடிவலசு குளம், 64 ஏக்கர் பரப்பளவு கொண்டது; 3,500 அடி நீளம் உள்ள குளம், 6.60 மில்லியன் கனஅடி நீரை தேக்கலாம். இரண்டு மதகுகள் அமைக்கப்பட்டுள்ளன.குளத்தின் வாயிலாக, 220 ஏக்கர் பாசன பெறுகிறது. மேலும், மழைநீரை ஆதாரமாக கொண்ட குளம் நிரம்பினால், தேவம்பாடி மட்டுமின்றி சுற்றுப்பகுதி கிராமங்களின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது.மழை காலங்களில் வழிந்தோடும் நீரை சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்ட குளம், கடந்த, 2002ம் ஆண்டு நிரம்பியது. அதன்பின், குளத்துக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. முட்புதர்கள் படர்ந்து காடு போல காட்சியளித்தது.பராமரிப்பில்லாமல் இருந்த குளத்தை துார்வாரி, வீணாக செல்லும் மழை நீரை சேமிக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, கடந்த பல ஆண்டுக்கு முன் விவசாயிகள் மற்றும் அரசு உதவியுடன் குளம் துார்வாரப்பட்டது. இதனை அடுத்து மழைக்காலங்களில் குளம் நிரம்பியது.குளம் துார்வாரப்பட்ட பின் கடந்த, நான்கு ஆண்டுகளாக நீர் நிரம்பி காட்சியளித்தது. தற்போது, பருவமழை கை கொடுக்காத சூழலில், நீர் வரத்தும் இல்லாததால், குளம் வறண்டு காணப்படுகிறது.விவசாயிகள் கூறியதாவது:தேவம்பாடி வலசு குளம் நிரம்பிய நிலையில் இருந்ததால், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. நீர் பற்றாக்குறை இல்லாமல் இருந்தது. பருவமழை கை கொடுக்காத சூழலில், குளத்துக்கு நீர் வரத்து இல்லை.இதனால், நான்கு ஆண்டுகளுக்கு பின் தண்ணீர் இன்றி குளம் வறண்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் சூழல் உள்ளது.வரும் ஆண்டில் பருவமழை கை கொடுத்து வறட்சி நீங்கும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ