உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஆலம் உண்ட மாதேஸ்வரருக்கு பக்தர்கள் பால் அபிேஷகம்

ஆலம் உண்ட மாதேஸ்வரருக்கு பக்தர்கள் பால் அபிேஷகம்

போத்தனூர் : பிச்சனூரில் உள்ள மால கோவில் மகா உற்சவம் முன்னிட்டு, பாலாபிஷேகம் நேற்று நடந்தது.பிச்சனூர், ரங்கசமுத்திரம் பிரிவிலுள்ள ஆலம் உண்ட மாதேஸ்வரர் கோவிலில் (மால கோவில்), தைப்பொங்கல் முன்னிட்டு மகா உற்சவம், கடந்த 15ல் பெரிய அபிஷேகத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை முதல், மக்கள் தங்கள் வளர்ப்பு மாடுகளிலிருந்து பால் கறந்து கொண்டு வந்து, ஆலம் உண்ட மாதேஸ்வரருக்கு, நீண்ட வரிசையில் காத்திருந்து பால் அபிஷேகம் செய்தனர்.இதில் கேரள மாநிலம் பாலக்காடு, சித்தூர், கொல்லங்கோடு, கொழிஞ்சாம்பாறை, கோபாலபுரம், மேனோன்பாறை, எருத்தேன்பதி, வேலந்தாவளம், மற்றும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள் வந்திருந்து, மாதேஸ்வரரை வழிபட்டு சென்றனர். இன்று தீர்த்தவாரி நடக்கிறது. நாளை தரிசனத்துடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை, சிவதொண்டர் ஜெகனாதன் சுவாமிகள் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி