உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் மாலை அணிந்தனர்

 ஐயப்பன் கோவிலுக்கு செல்ல பக்தர்கள் மாலை அணிந்தனர்

மேட்டுப்பாளையம்: ஐயப்பன் கோவிலுக்கு செல்ல, கார்த்திகை மாதம் முதல் நாளில், ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்தனர். சபரிமலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மாலை அணிந்து விரதம் இருப்பர். இதற்காக கார்த்திகை மாதம் முதல் நாளில், ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், மாலை அணிவது வழக்கம்.நேற்று கார்த்திகை மாதம் முதல் நாளை அடுத்து, மேட்டுப்பாளையம், காரமடை ஆகிய இடங்களில் உள்ள ஐயப்பன் கோவில்களில், ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்தனர். மேட்டுப்பாளையம், காரமடை சாலையில் உள்ள சிவன்புரத்தில் ஐயப்பன் கோவில் உள்ளது. அதிகாலை, 4:00 மணிக்கு கோவில் நடை திறந்து அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தன. ஐந்தரை மணிக்கு நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், மாலை அணிந்து, ஐயப்பன் சுவாமியை வழிபட்டனர். அரவிந்த் ஆக்சன் தலைமையில், குருசாமிகள் பக்தர்களுக்கு மாலை அணிவித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் அச்சுதன் குட்டி, செயலாளர் சத்தியநாராயணன் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். காரமடை காந்தி மைதானத்தில் உள்ள ஐயப்பன் கோவிலில், அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறந்து கலச அபிஷேகம், கணபதி ஹோமம், மகா தீபாராதனை நடந்தது. இதை அடுத்து மகா கணபதி, அம்மன் ஆகிய சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடந்தது. காலை 4:00 மணி முதல் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு, குருசாமிகள் மாலை அணிவித்தனர். ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஐயப்பன் பூஜா சங்க தலைவர் பாரதி, செயலாளர் மணிகண்டன், பொருளாளர் சதீஷ்குமார் மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி