உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தினமலர் - பட்டம் இதழ் சார்பில் வினாடி - -வினா; பர்ப்பிள் டாட்ஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல்

 தினமலர் - பட்டம் இதழ் சார்பில் வினாடி - -வினா; பர்ப்பிள் டாட்ஸ் பள்ளி மாணவர்கள் அசத்தல்

பொள்ளாச்சி: 'தினமலர்' நாளிதழின் மாணவர் பதிப்பான, 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக்குழுமம் சார்பில், 'பதில் சொல் -- பரிசை வெல்' மெகா வினாடி --- வினா போட்டி, பொள்ளாச்சி அருகே கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பர்ப்பிள் டாட்ஸ் மழலையர் பள்ளியில் நடந்தது. மாணவர்களின் கற்றல் ஆர்வம் மற்றும் நுண்ணறிவு திறனை ஊக்குவித்து, படிப்பின் மீதான ஆர்வத்தை விரிவுப்படுத்துவதற்காக, 'தினமலர்' நாளிதழ் 'பட்டம்' இதழ் சார்பில், மெகா வினாடி -- -வினா போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டு போட்டியானது, 'தினமலர்' நாளிதழின், 'பட்டம்' இதழ் மற்றும் எஸ்.என்.எஸ். கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் வினாடி- - வினா போட்டிக்கு, 'சத்யா ஏஜென்சிஸ்' மற்றும் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்' நிறுவனங்கள், 'கிப்ட் ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளன. இப்போட்டியில், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் இருந்து, 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்கின்றனர். பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் அணியினர், அரையிறுதிக்கு தகுதி பெறுவர். அவர்களில் இருந்து தேர்வாகும் எட்டு அணியினர், இறுதிப் போட்டியில் பங்கேற்பர். அதில், மழலையர் பள்ளிகளைப் பொறுத்தமட்டில், பள்ளி அளவிலேயே வினாடி - வினா போட்டி நடத்தி முடிக்கப்பட்டு, பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த வரிசையில், பொள்ளாச்சி அருகே கோட்டூர் மலையாண்டிபட்டிணம் பர்ப்பிள் டாட்ஸ் மழலையர் பள்ளியில் நடந்தது. தகுதிச்சுற்றில், 60 மாணவர்கள் பங்கேற்றனர். அதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 மாணவ, மாணவியர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு பள்ளி அளவில் இறுதிப் போட்டியில் பங்கேற்றனர். மூன்று சுற்றுகளாக நடந்த விறுவிறுப்பான இறுதி போட்டியில், 'பி' அணி முதல் பரிசை வென்றது. அந்த அணியில் இடம் பெற்ற ஒன்றாம் வகுப்பு மாணவி லக் ஷனா, மாணவர் லித்தேஸ் ஆகியோர் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளித் தாளாளர் கவுதமன், முதல்வர் கனகதாரா, ஒருங்கிணைப்பாளர்கள் சன்மதி, மாரியம்மாள், ஆசிரியர்கள் சுதா, காயத்ரி, ஜெயந்தி ஆகியோர் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். சிறந்த தொடக்கம்! பள்ளித் தாளாளர் கவுதமன்: 'தினமலர் -- பட்டம்' இதழ் வாயிலாக, 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் தமிழ் வாசிப்பு திறனை மேம்படுத்த முடிகிறது. 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற ஒற்றுமைச் செய்தியை அறிந்து கொள்ளவும், தமிழ் மொழியின் பெருமையை உணரவும் குழந்தைகள் இடையே வினாடி - வினா போட்டி, சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது. கிராமப்புற குழந்தைகளின் வாசிப்பு பழக்கம், மொழித் திறன், அறிவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு, இதற்கான செயல்பாட்டை பர்ப்பிள் டாட்ஸ் மழலையர் பள்ளி முன்னெடுத்துள்ளது. இவ்வாறு, கூறினார்.

அறிவுப்பூர்வமான இதழ்!

மாணவி லக் ஷனா: 'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி - வினா போட்டியில் வெற்றி பெற்றதால் மகிழ்ச்சியாக உள்ளது. இனி வரும் நாட்களிலும் 'பட்டம்' இதழ் தொடர்ந்து படித்து, எனது பொதுஅறிவையும், தமிழ் வாசிப்பையும் மேம்படுத்திக் கொள்வேன். மாணவர் லித்தேஸ்: 'தினமலர் -- பட்டம்' இதழ் நடத்தும் வினாடி - வினா போட்டியில் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டு வென்றுள்ளேன். 'பட்டம்' இதழ் படிக்க, எனது பெற்றோர்கள், ஆசிரியர்கள் உறுதுணையாக உள்ளனர். படிப்பதற்கு எளிமையாகவும், அறிவுப்பூர்வமாகவும் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை