உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிறது வடவள்ளி

உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகிறது வடவள்ளி

பேரூர் : உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தப் பணிகள் வடவள்ளியில் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது.கோவை மாநகராட்சியுடன், வடவள்ளி, வீரகேரளம் பேரூராட்சி உட்பட மொத்தம், 11 உள்ளாட்சி அமைப்புகள் இணைக்கப்படுகின்றன. கடந்த 20 ஆண்டுகளாக, வடவள்ளி பேரூராட்சி தி.மு.க., வசம் இருந்து வருகிறது. தற்போது, இரண்டு வார்டாக பிரிக்கப்பட்டு, மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதால், அ.தி. மு.க., - தே.மு. தி.க.,வினர் 'குஷி'யில் உள்ளனர். இதில், வடவள்ளியின் வடக்கு பகுதி 16வது வார்டாகவும், தெற்கு பகுதி 17வது வார்டாகவும் பிரித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வடவள்ளியில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பி, கட்சி நிர்வாகிகள், பொதுப்பிரச்னையை கையில் எடுத்தல், உள்ளூர் முக்கிய வி.ஐ.பி., யை சந்தித்து ஆதரவு திரட்டுதல் என, ஆயத்த பணிகளை துவக்கி விட்டனர். இந்தமுறை எப்படியாவது வடவள்ளியை கைப்பற்றியே தீரவேண்டுமென அ.தி.மு.க., கூட்டணியும், தக்க வைத்தாக வேண்டுமென தி.மு.க., கூட்டணியும் 'கங்கணம்' கட்டிக்கொண்டு, 'கிரவுண்ட் ஒர்க்' பணியை முடுக்கி விட்டுள்ளன. வடவள்ளியைச் சேர்ந்த தி.மு.க., நிர்வாகி கூறுகையில்,''மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டதாக அதிகாரப் பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஒரு சமயம், மாநகராட்சி வார்டாக இருந்தாலும், ஆண், பெண் வார்டா? பொது மற்றும் ரிசர்வ் வார்டா? என்பது தெரியவில்லை. எப்படி இருந்தாலும் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தயாராகி வருகிறோம்,''என்றார். பேரூராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,''மாநகராட்சியுடன் இணைப்பது 90 சதவீதம் உறுதியாகி விட்டது. அறிவிப்பு விரைவில் வெளியாகுமென தெரிகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை