| ADDED : ஆக 11, 2011 11:43 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த நெகமத்தில், கோவை மாவட்ட கைத்தறி நெசவாளர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணைத் தலைவர் குமார் தலைமை வகித்தார். கைத்தறி நெசவாளர்களுக்கு கூலி உயர்வு ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்; அறிவிக்கப்பட்ட கூட்டுறவு சங்கங்களின் கடன்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்; மத்திய அரசு அறிவித்துள்ள புங்கர் பீமா இன்சூரன்ஸ் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஓய்வூதியத்தை, ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும்; கூட்டுறவு சங்கங்களில் தேங்கியுள்ள சேலைகளை உடனடியாக கொள்முதல் செய்து விற்க வேண்டும்; இலவச மின்சாரத்தை 200 யூனிட்டாக அதிகரிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கைத்தறி சங்க மாவட்ட செயலாளர் வீரமணி, சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் வேலுசாமி, துணை செயலாளர் பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.