உள்ளூர் செய்திகள்

தே.மு.தி.க., கூட்டம்

ஆனைமலை : ஆனைமலை அடுத்த கோட்டூரில், தே.மு.தி.க., செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. நிர்வாகி சையது அபுதாகிர் வரவேற்றார். நகர கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகி ஜெகநாதன் முன்னிலை வகித்தார். வரும் 25ம் தேதி, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது; வரும் உள்ளாட்சி தேர்தலில் கோட்டூர் பேரூராட்சியில், வெற்றி பெற பாடுபடுவது; உள்ளாட்சி தேர்தலுக்கு முன், உறுப்பினர் எண்ணிக்கையை அதிகப்படுத்துவது என்பன உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை