உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / டேபிள் டென்னிஸ் போட்டியில் மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

டேபிள் டென்னிஸ் போட்டியில் மாற்றுத்திறனாளிகள் அசத்தல்

கோவை:மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்ற மாற்றுத்திறனாளிகள், அசத்தலாக விளையாடி பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினர். வடவள்ளி முல்லை டேபிள் டென்னிஸ் அகாடமி சார்பில், மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டி ஜன., 26,27,28 ஆகிய தேதிகளில், முல்லை டேபிள் டென்னிஸ் அகாடமியில் நடந்தது. கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.பல்வேறு வயது பிரிவின் அடிப்படையில் ஒற்றையர் போட்டி நடத்தப்பட்டது. ஓபன் பிரிவில் மட்டும் ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் நடத்தப்பட்டன. மாற்றுத்திறனாளிகளுக்கு தனிப்பிரிவில் போட்டிகள் நடத்தப்பட்டன.ஒன்பது வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கவிஷ், ஆரோன் மரியா; 13 வயது பிரிவில் யோகிதா, ரேயன்ஷ்; 15 வயது பரிவில் சாய் நிதிஷ், ஆருத்ரா; 17 வயது பிரிவில் ஆருத்ரா, சாய் நிதிஷ் ஆகியோர் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா டேபிள் டென்னிஸ் போட்டியில் அவிநாஷ் முதலிடம், சரவணகுமார் இரண்டாமிடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை