பொள்ளாச்சி,- பி.ஏ.பி., பாசன நீர் திருட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளளது.உடுமலை அடுத்த திருமூர்த்தி அணையில் இருந்து, முதலாம் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வளம், வருவாய், மின்வாரியம், போலீசாரை உள்ளடக்கிய கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.கடந்த, 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில், மார்ச் 10ம் தேதி வரை, இக்குழுவினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளார். இந்நிலையில், பொள்ளாச்சி டி.எஸ்.பி., அலுவலகத்தில், விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் இடையே, பி.ஏ.பி., தண்ணீர் திருட்டை தடுப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. டி.எஸ்.பி., ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார்.தொடர்ந்து, பி.ஏ.பி., கால்வாய் மற்றும் கிளை கால்வாய்களில் இருந்து, எவருமே தண்ணீர் திருட்டில் ஈடுபடக் கூடாது. தண்ணீர் திருட்டில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால், அவர்கள் மீது குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டது.கூட்டத்தில், பி.ஏ.பி., திட்ட செயற்பொறியாளர் காஞ்சித்துரை, திட்ட உதவி செயற்பொறியாளர் சக்திகுமார், துணை தாசில்தார் பட்டுராஜா, கோமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதுரை, பாலாறு படுகை திட்டக்குழு தலைவர் பரமசிவம், பாசன சபை தலைவர்கள் தங்கவேல், சிவக்குமார், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.