உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  முதலாவது டிவிஷன் கிரிக்கெட்: கோவை நைட்ஸ் வீரர் சதம்

 முதலாவது டிவிஷன் கிரிக்கெட்: கோவை நைட்ஸ் வீரர் சதம்

கோவை: கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், முதலாவது டிவிஷன் போட்டி எஸ்.ஆர்.ஐ.ஐ., பி.எஸ்.ஜி., உள்ளிட்ட மைதானங்களில் நடந்துவருகிறது. கோவை நைட்ஸ் அணியும், ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் அகாடமி அணியும் மோதின. கோவை நைட்ஸ் அணியினர், 47.3 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 258 ரன் எடுத்தனர். வீரர்கள் ராதாகிருஷ்ணா, 101 ரன், கார்த்திக் சங்கர், 57 ரன் எடுத்தனர். எதிரணி வீரர்கள் சக்திவேல் நான்கு விக்கெட், சூர்யா மூன்று விக்கெட் வீழ்த்தினர். ஆர்.கே.எஸ்., கிரிக்கெட் கிளப் அகாடமி அணியினர், 39.4 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 143 ரன் எடுத்தனர். வீரர்கள் சரவணன், 54, சக்திவேல், 31 ரன் எடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி