உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலைய செயல்பாடு துவக்கம்

 மிதக்கும் சூரிய மின் உற்பத்தி நிலைய செயல்பாடு துவக்கம்

கோவை: உக்கடம் பெரிய குளத்தின் தென்கரையில், 13.7 சென்ட் நீர் பரப்பில் 'நமக்கு நாமே' திட்டத்தில், ரூ.1.45 கோடியில் மிதக்கும் சூரிய மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் பங்களிப்பு ரூ.72.50 லட்சம், சுவிட்சர்லாந்து துாதரகம் பங்களிப்பு ரூ.72.50 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளியை கிரகிக்கும், 280 தகடுகள் தண்ணீரில் மிதக்க விடப்பட்டு, மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 693 யூனிட் மின்னுற்பத்தி செய்ய முடியும். இப்பகுதியில் 'சிசி டிவி' கேமரா, இடிதாங்கி, மின் விளக்குகள், தீயணைக்கும் கருவிகள், காலநிலை அளவீடு, பாதுகாப்பு கம்பி வேலிகள், தானியங்கி மின் தகடு சுத்தம் செய்யும் நீர் தெளிப்பான் வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. இங்கு உற்பத்தி செய்யும் மின்சாரம், மின்வாரியத்துக்கு வழங்கப்பட்டு, மற்ற இடங்களில் மாநகராட்சி பயன்படுத்திய மின்சார யூனிட்டுகளில் கழித்துக் கொள்ளப்படும். இந்நிலையத்தை எம்.பி., ராஜ்குமார், மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர். மின்வாரிய தலைமை பொறியாளர் சுரேஷ்குமார், மேற்பார்வை பொறியாளர் சதீஷ்குமார், மாநகராட்சி உதவி பொறியாளர் சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை