கோவை:பள்ளிக்கல்வித்துறையின் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி நேரு ஸ்டேடியத்தில் உள்ள ஜிம்னாஸ்டிக் அரங்கில் நேற்று நடந்தது.பள்ளிகல்வித்துறை சார்பில் 2023-24ம் ஆண்டுக்கான கோவை வருவாய் மாவட்ட அளவில் புதிய விளையாட்டு போட்டிகள் பல்வேறு பள்ளிகளில் நடக்கிறது. இதன் ஜிம்னாஸ்டிக் போட்டி நேரு ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது.இதில், பள்ளி மாணவ - மாணவியருக்கு 14, 17, 19 ஆகிய மூன்று வயது பிரிவின் அடிப்படையில் போட்டிகள் நடத்தப்பட்டன. பல்வேறு பள்ளிகளை சேர்ந்த சுமார் 60 மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.மாணவர் பிரிவு14 வயதுக்கு உட்பட்டோருக்கான வால்ட் போட்டியில், பாகித் அகமது (ஸ்டேன்ஸ்), எல்வின் சருண் (ஸ்ரீ வெங்கடேஸ்வரா), ஆதி (ஸ்ரீ வெங்கடேஸ்வரா); 17 வயது பிரிவில், சிவராமன் (சபர்பன்), ஜீவானந்தம் (ஸ்ரீ வெங்கடேஸ்வரா), சஞ்சய் குமார் (ஸ்ரீ வெங்கடேஸ்வரா) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.மாணவியர் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான வால்ட் போட்டியில், அனு சிவானி (ஸ்ரீ சவுடேஸ்வரி பள்ளி), மோனிகா (சபர்பன்), ரோஷினி (ஸ்ரீ வெங்கடேஸ்வரா); 17 வயது பிரிவில், அக்சரா (அவிலா கான்வென்ட்), ருதிகா (சபர்பன்), அக்ஷயா (ஸ்ரீ வெங்கடேஸ்வரா) ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்தனர்.
கலை இழந்தது ஜிம்னாஸ்டிக்
ஒவ்வொரு ஆண்டும் மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் சிறப்பாக பங்கேற்று அதிக பதக்கங்கள் வெல்லும் பள்ளிக்கு ஒட்டுமொத்த சாம்பின்ஷிப் வழங்கப்பட்டு வந்தது. இந்தாண்டு டீம் சாம்பின்ஷிப் கோப்பையை பள்ளிக்கல்வித்துறை ரத்து செய்துள்ளது. இதனால், ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. கடந்தாண்டு 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற நிலையில், இந்தாண்டு போட்டிகளில், 55-60 பேர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.