உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  விருந்தினர் சேவை உயர்த்த ஹவுஸ்கீப்பிங் பயிற்சி

 விருந்தினர் சேவை உயர்த்த ஹவுஸ்கீப்பிங் பயிற்சி

கோவை: மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் தென் மண்டல அலுவலகம், தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் கோவை அலுவலகம் மற்றும் ஸ்கால் இன்டர்நேஷனல் கோவை கிளை ஆகியவை இணைந்து, ஹோட்டல் பராமரிப்புப் பிரிவு (ஹவுஸ் கீப்பிங்) பணியாளர்களுக்கான 'ஹவுஸ்கீப்பிங்கில் சிறந்த நடைமுறைகள்' என்ற திறன் மேம்பாட்டு பயிற்சி நடத்தின. விருந்தினர்களின் அனுபவத்தை மேம்படுத்துதல், சேவை தரத்தை உயர்த்துதல், மற்றும் தொழில்முறை ஹவுஸ்கீப்பிங் தரநிலைகளை வலுப்படுத்தும் நோக்கில் இப்பயிற்சி அளிக்கப்பட்டது. கோவை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள, 24 ஹோட்டல்களில் இருந்து 77 ஹவுஸ்கீப்பிங் பணியாளர்கள் பங்கேற்றனர். மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் தென் மண்டல இயக்குநர் வெங்கடேசன் பேசுகையில், சுற்றுச் சூழலுக்கு உகந்த நிலையான பராமரிப்பு நடைமுறைகள் மற்றும் விருந்தினர்களின் திருப்தியை அதிகரிப்பது, இன்றைய காலகட்டத்தில் மிகவும் அவசியம், என்றார். தொடர்ந்து, இந்திய ஹோட்டல் மேலாண்மை நிறுவனத்தின் சென்னை விரிவுரையாளர் யூஜின், ஹவுஸ் கீப்பிங் குறித்த தொழில்நுட்ப அமர்வை நடத்தினார். தமிழ்நாடு சுற்றுலாத்துறை மாவட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி, ஸ்கால் கோவை கிளை கூட்டமைப்பின் தலைவர் ரமேஷ் சந்திரகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை