உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சர்வதேச பலூன் திருவிழா; மக்களை கவரும் கண்காட்சி 

சர்வதேச பலூன் திருவிழா; மக்களை கவரும் கண்காட்சி 

பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே பலுான் திருவிழாவில், வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சியை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகின்றனர். பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில், ஒன்பதாவது ஆண்டு சர்வதேச வெப்ப பலுான் திருவிழா நடக்கிறது. மொத்தம், எட்டு நாடுகளில் இருந்து, 10 பலுான்கள் வந்துள்ளன.பலுான் திருவிழாவில் பொதுமக்களை மகிழ்விக்கும் வகையில், யோக ஸ்ரீ கிரியேட்டர்ஸின் கண்காட்சி நடக்கிறது.கடந்த, 12ம் தேதி துவங்கிய கண்காட்சியில், எலக்ட்ரானிக் சாதனங்கள், பர்னிச்சர்கள், உணவு வகைகள், 'தினமலர்' நாளிதழ் அரங்கு என, 100க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. உடல் மசாஜ் செய்வதற்காக கருவிகள், குட்டீஸ்களை கவரக்கூடிய பலவிதமான விளையாட்டுகளும் இடம் பெற்றுள்ளன.ஒவ்வொரு அரங்கிலும் பொதுமக்களை கவரும் வகையில் பொருட்கள் இடம் பெற்று இருந்தன. மேலும், ராட்டினம் உள்ளிட்டவற்றிலும் குட்டீஸ்கள் விளையாடி மகிழ்கின்றனர். இத்திருவிழா நாளை வரை நடக்கிறது. பொதுமக்கள் கண்டுகளிக்க போதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை