உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குளத்தில் களப்பணி செய்ய அழைப்பு

குளத்தில் களப்பணி செய்ய அழைப்பு

கோவில்பாளையம்:கோவில்பாளையம் அருகே, 125 ஏக்கர் பரப்பளவு உள்ள காளிங்கராயன் குளம் உள்ளது. இங்கு கடந்த நான்காண்டுகளாக கவுசிகா நீர்க் கரங்கள் அமைப்புடன், தன்னார்வலர்கள் இணைந்து ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று காலையில், சீரமைப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ஆர்வம் உள்ளோர் பங்கேற்கலாம் என அழைப்பு விடுத்துள்ளனர்.அக்ரஹார சாமக்குளத்தில் உள்ள 165 ஏக்கர் குளம், சின்னவேடம்பட்டி ஏரி, எல்லப்பாளையத்தில் உள்ள 65 ஏக்கர் ஆவாரம் குளம், வையம்பாளையத்தில் உள்ள கவுசிகா தடுப்பணை, அல்லி குளத்தில் உள்ள 85 ஏக்கர் பரப்பளவு குளம் ஆகியவற்றில், இன்று காலை களப்பணி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி