மேலும் செய்திகள்
வி.பி.ஜே. ஜூவல்லர்ஸ் கண்காட்சி இன்று நிறைவு
15 hour(s) ago
நாளைய மின்தடை
15 hour(s) ago
தி.மு.க., கூட்டணி ஆர்ப்பாட்டம்
15 hour(s) ago
குடியிருப்பில் புகுந்த யானை; தொழிலாளர்கள் பீதி
15 hour(s) ago
கோவை;கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் புடைசூழ முகூர்த்தக்கால் நடும் வைபவம் நேற்று நடந்தது.கோனியம்மன் கோவில் திருவிழா பிப்.,28 அன்று நடக்கிறது. அதற்கான முகூர்த்த கால் நடும் நிகழ்வு நேற்று நடந்தது. கோனியம்மன் கோவிலில் நேற்று காலை, அம்மனுக்கு சிறப்புபூஜை நடந்தது.கோனியம்மன் முன்பு பந்தக்கால் எழுந்தருளுவித்து, மஞ்சள் பூசி குங்கும திலகமிட்டு, மலர் மாலை அணிவிக்கப்பட்டது. சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.தொடர்ந்து, மங்கள இசை முழங்க கோனியம்மன் கோவிலிலிருந்து, பந்தக்கால் சகிதமாக ஊர்வலமாக புறப்பட்ட பக்தர்கள், பெரியகடைவீதி வழியாக, ராஜவீதி தேர்நிலைத்திடலை அடைந்தனர்.அங்கு சிவாச்சாரியார்கள் பூமியில் சிறு குழி ஏற்படுத்தி, புனித நீர் நிரப்பி, மஞ்சள் கலந்த நவதானியங்களை சேர்த்து, பந்தக்கால் நட்டனர். பூமி பூஜை நடத்தி, மலர் மாலை அணிவித்து சிறப்பு வழிபாடு செய்தனர்.பக்தர்கள் புடைசூழ நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவில் அறங்காவலர் குழு தலைவர் குமார், வார்டு கவுன்சிலர் மனோகரன், செயல் அலுவலர் சந்திரமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago