உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  நிலுவை வழக்கில் தீர்வு காண லோக் அதாலத்!

 நிலுவை வழக்கில் தீர்வு காண லோக் அதாலத்!

'லோ க் அதாலத்' எனப்படும் மக்கள் நீதிமன்றம் சமாதான நிலை மற்றும் சமரசம் வாயிலாக மக்களின் பிரச்சனைகளை தீர்க்க இந்திய அரசால் உருவாக்கப்பட்ட நீதி மன்றம் ஆகும். இந்திய நீதிமன்றங்கள், தங்களிடம் நிலுவையிலுள்ள வழக்குகளை, மனுதாரர்களின் விருப்பத்தின் அடிப்படையிலோ அல்லது தன்னிச்சையாகவோ சமரச முறையில் தீர்வு காண மக்கள் நீதி மன்றங்களுக்கு அனுப்பலாம். இது ஒரு மாற்று முறையில் சச்சரவுகளுக்கு தீர்வு காணும் ஒரு வழிமுறையாகும். 'லோக்' என்பது மக்களையும் 'அதாலத்' என்பது நீதிமன்றத்தையும் குறிக்கும். மக்கள் நீதிமன்றம் என்ற எண்ணத்தினை முன்மொழிந்ததில் சுப்ரீம் கோர்ட்முன்னாள் தலைமை நீதிபதி பி.என்.பகவதிக்கு முக்கிய பங்கு உள்ளது. முதன் முதலில் குஜராத் மாநிலம், ஜூனகார் என்ற இடத்தில் 1982, மார்ச், 14 ல் 'லோக் அதாலத்' எனப்படும் மக்கள் நீதி மன்ற விசாரணை நடந்தது. சட்டப்பணிகள் ஆணைக் குழு பிரிவு 19- ன்படி, மக்கள் நீதிமன்றம், மூன்று பேர் கொண்ட அமர்வாக இருக்கும். அதில் ஒருவர் பணியில் இருக்கும் அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி, மற்றொருவர் சமூக நலப் பணியாளர் அல்லது பொது நல ஊழியர், மூன்றாம் நபர் வழக்கறிஞர் இருப்பார்கள். நிலுவையிலுள்ள வழக்குகளில் சம்மந்தப்பட்ட இருதரப்புக்கும் இடையே சமரசத் தீர்வு ஏற்படுத்துதல், நீதிமன்றத்திற்கு அப்பாற்பட்ட சில பிரச்சனைகளுக்கு பேசி தீர்வு காண முயற்சி செய்தல், விரைவாக நீதி கிடைக்க வழிவகை செய்கிறது. மக்கள் நீதிமன்றம் மூலம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கும் வழக்குகள் மட்டுமின்றி, கோர்ட்டுக்கு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பும் வழக்கில் தீர்வு கண்டுவிடலாம். மக்கள் நீதிமன்றத்தில், உத்தரவே இறுதியானது. அதற்குமேல் மேல்முறையீடு செய்யமுடியாது. காசோலை தொடர்பான வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்ப பிரச்னைகள் தொடர்பான வழக்குகள், தொழில் தகராறுகள், தொழிலாளர் பிரச்னை தொடர்பான வழக்குகள், குற்றவியல் வழக்குகளில் சமாதானம் ஏற்படுத்தி கொள்ள தன்மையுள்ள வழக்குகள், நில ஆர்ஜிதம் மற்றும் இழப்பீடு தொடர்பான வழக்குகள், வங்கி கடன் பிரச்னைகள், வாடகை விவகாரங்கள், விற்பனை வரி, வருமான வரி மற்றும் மறைமுக வரி தொடர்பான பிரச்னை போன்றவற்றுக்கு மக்கள் நீதி மன்றத்தில் நிரந்தர தீர்வு காணலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை