மேலும் செய்திகள்
இ-சிகரெட், லேப்டாப் பறிமுதல்
2 hour(s) ago
மாநில கூடைப்பந்து போட்டி; வீரர், வீராங்கனை சுறுசுறுப்பு
2 hour(s) ago
கடைவீதிகளில் மக்கள் கூட்டம்
2 hour(s) ago
லிங்கனுாரில் குறுகிய தரைப்பாலத்தில் தடுமாற்றம்!
2 hour(s) ago
உடுமலை- தமிழக அரசின் 'உங்களைத்தேடி உங்கள் ஊரில்' திட்டத்தின் கீழ், திருப்பூர் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், உடுமலை தாலுகாவிலுள்ள கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். தாலுகாவிலுள்ள, 75 வருவாய் கிராமங்களுக்கும், மாவட்ட அளவிலான, துறை அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர்.நேற்று காலை, 9:00 மணிக்கு, கிராமங்களில், அலுவலர்கள், இ - சேவை மையம், ஆரம்ப சுகாதார நிலையம், ரேஷன் கடைகள்,சத்துணவு மையங்கள், பள்ளிகள், கூட்டுறவு சங்கங்கள், வேளாண் அலுவலகம், வி.ஏ.ஓ., அலுவலகம், ஊராட்சி அலுவலகம், கழிப்பிடம், சுகாதார வளாகம், ஆரம்ப சுகாதார நிலையம் என அரசுத்துறை அலுவலகங்கள் ஆய்வு செய்து, தணிக்கை அறிக்கை வழங்க அறிவுறுத்தப்பட்டது.இன்றும், அதிகாலை முதல், 9:00 மணி வரை, திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வினியோகம், பொது போக்குவரத்து, காலை உணவுத்திட்டம் ஆகியவற்றை ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.இதன் அடிப்படையில், நேற்று மாவட்ட அளவிலான துறை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். பொதுமக்களிடம் மனுக்கள் பெற்றுக்கொண்டனர்.மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ், நேற்று காலை, குடிமங்கலம் ஒன்றியம், பெரியபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி, ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் ஆய்வு செய்து, மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் முறைகளை ஆய்வு செய்தார்.ஆசிரியராக மாறி, மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். சிறந்த மாணவர்களுக்கு பாராட்டு சான்றிதழ், பரிசு வழங்கினார்.தொடர்ந்து, ஆத்துக்கிணத்துப்பட்டி அங்கன்வாடி மையம், கணக்கம்பாளையம் ஊராட்சி சாதிக்நகர் அங்கன்வாடி மையம் ஆகியவற்றில் குழந்தைகளுக்கு வழங்கும் உணவை ஆய்வு செய்தார்.உடுமலை கால்நடை மருத்துவமனையில், சிகிச்சை முறை, மருந்துகள் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு,மாணவர்களுடன், சாலை பாதுகாப்பு வார விழா, உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.கல்லாபுரம் ஊராட்சி, கொம்பே கவுண்டன் துறையில், அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், நெல் சாகுபடி குறித்து கள ஆய்வு மேற்கொண்டு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். பூளவாடி புதுநகர் பகுதியில், தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.மதியம், உடுமலை நகராட்சி அலுவலகத்தில், மாவட்ட அளவிலான அலுவலர்களின் கள ஆய்வு கருத்துக்கள் மீதான ஆய்வுக்கூட்டம் நடந்தது.மாலை, உடுமலை தாலுகா அலுவலகத்தில், கலெக்டர் ஆய்வு மேற்கொண்டதோடு, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.இரவு, அரசு மாணவர் விடுதிகள், பஸ் ஸ்டாண்ட், பொது போக்குவரத்து, அரசு மருத்துவமனைகள் ஆய்வு மேற்கொள்கிறார். இன்று காலை, திடக்கழிவு மேலாண்மை திட்டம், சுகாதார நடவடிக்கைகள், பொது போக்குவரத்து, காலை உணவு திட்டம், பால் உற்பத்தியாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை வாரியாக ஆய்வு நடக்க உள்ளது.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago