உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சபரிமலையில் மகர ஜோதி கேரள ரயில்கள் ஹவுஸ்புல்

சபரிமலையில் மகர ஜோதி கேரள ரயில்கள் ஹவுஸ்புல்

திருப்பூர்:நாளை மறுதினம் (15ம் தேதி) சபரிமலையில் மகர ஜோதி தரிசனம் நிகழ உள்ள நிலையில், கேரள மாநிலம் பயணிக்கும் ரயில்களில் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது. கேரள மாநிலம், சபரிமலை ஐயப்பன் கோவில் மகர ஜோதி தரிசனம், 15ம் தேதி நடக்கிறது. பொன்னம்பல மேட்டில் ஒளிரும் ஜோதியை காண, பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு பயணிக்கின்றனர்.தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து கொல்லம், கோட்டயம் ஸ்டேஷன்களுக்கு, சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே பக்தர்களுக்காக அறிவித்தது. அறிவித்த மறுநாளே, முன்பதிவு இருக்கைகள் நிரம்பின. சபரிமலைக்கு அருகே உள்ள செங்கனுார் ஸ்டேஷனுக்கு, முன்பதிவில்லா டிக்கெட் பெற்று, ஐயப்ப பக்தர்கள் பலர் பயணிக்கின்றனர். இதுதவிர, கேரளா நோக்கி செல்லும் கொல்லம், கோட்டயம் சிறப்பு ரயில்கள், வழக்கமான சபரி, கேரளா, ஐலேண்ட், பெங்களூரு இன்டர்சிட்டி உள்ளிட்ட ரயில்கள் ஐயப்ப பக்தர்களால் நிரம்பி வழிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை