மேலும் செய்திகள்
நாளைய மின்தடை
3 minutes ago
மூதாட்டியிடம் நகை திருடிய நகராட்சி ஊழியர் கைது
3 minutes ago
சேதமடைந்த இரும்பு தடுப்புகள் மாற்றியமைக்க வலியுறுத்தல்
6 minutes ago
புத்தாண்டில் சுற்றுலா பயணியர் குதுாகலம்
6 minutes ago
வால்பாறை: சிவன் கோவில்களில் நடந்த பிரதோஷ பூஜையில் பக்தர்கள் பங்கேற்று, சிவபெருமானையும், நந்தி பகவானையும் வழிபட்டனர். * வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவில் சன்னதியில் எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதருக்கு, மார்கழி மாத பிரதோஷபூஜை நேற்று நடந்தது. மாலை, 5:00 மணிக்கு பால், தயிர், மஞ்சள், இளநீர், திருநீறு, பன்னீர் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை, 6:00 மணிக்கு, சிவபெருமானுக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. அதன்பின், ரிஷப வாகனத்தில் சிவபெருமான், தேவியருடன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதோஷ பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. * வால்பாறை சிறுவர்பூங்கா ஆதிபராசக்தி கோவிலில், ேஷக்கல்முடி எஸ்டேட் சிவன் கோவில்களில் நேற்று மாலை, 6:00 மணிக்கு நடந்த பிரதோஷ பூஜையில், சிவபெருமானுக்கு, 16 வகையான பொருட்களை கொண்டு அபிேஷகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. * கிணத்துக்கடவு, எஸ்.எம்.பி., நகர் அன்னபூரணி தாயார் உடனமர் சோற்றுத்துறைநாதர் கோவிலில், பிரதோஷ நாளான நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மேலும், ஆருத்ரா தரிசனத்தையொட்டி மாணிக்கவாசகர் மற்றும் திருமுறை நாதருக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில், பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். * கிணத்துக்கடவு சிவலோக நாயகி உடனமர் சிவலோக நாதர் கோவிலில் சுவாமிக்கும், நந்தி பகவானுக்கும் சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தது.
3 minutes ago
3 minutes ago
6 minutes ago
6 minutes ago