| ADDED : நவ 17, 2025 01:54 AM
கோவை: ஓய்வு பெற்ற 3 மெட்ராஸ் ரெஜிமென்ட்டின் முன்னாள் ராணுவ அதிகாரிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், ராணுவ வீரர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். ராம்நகரில் உள்ள விஜய்பார்க் இன் ஓட்டலில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், 1960 முதல் கடந்த மாதம் வரை, ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற வீரர்கள் பங்கேற்றனர். 1965, 1971, 1972ம் ஆண்டுகளில் நடந்த போர்களில், எதிரிகளை ஒரு கை பார்த்தவர்கள் அவர்கள். மூத்த ராணுவ வீரர்களான ராணுவ ஜெனரல் காமத், பிரிகாடியர் அஜீத்சிங், கேப்டன்கள் மாஹி, சந்திரசேகர், தாமஸ், நாகராஜ், மேஜர் மணி ஆகியோர் பங்கேற்றனர். மொத்தம், 300 ராணுவ வீரர்கள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்றனர். ராணுவ வீரர்கள் அனைவரும் கவுரவிக்கப்பட்டனர். விஜய் பார்க் இன் ஓட்டல் நிர்வாக இயக்குனர் ரமேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். முன்னதாக, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.