உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உர செலவை குறைக்கும் நானோ உரங்கள்! பயிற்சி முகாம் விவசாயிகளுக்கு அறிவுரை

உர செலவை குறைக்கும் நானோ உரங்கள்! பயிற்சி முகாம் விவசாயிகளுக்கு அறிவுரை

பொள்ளாச்சி:பொள்ளாச்சி தெற்கு வேளாண்மை துறை சார்பில், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ், சமச்சீர் உரமிடல், ரசாயன உரம் குறைவாக பயன்படுத்துதல் தொடர்பான தலைப்பில் விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் கஞ்சம்பட்டியில் நடந்தது.பொள்ளாச்சி தெற்கு வேளாண் உதவி இயக்குனர் நாகபசுபதி தலைமை வகித்து பேசும் போது, ''உர பயன்பாட்டு திறனை அதிகரிக்க கடைபிடிக்க வேண்டிய யுக்திகள், உர பாசனம் முறையை பயன்படுத்தும் போது, உர பயன்பாட்டு திறன் அதிகரிக்கும்.தற்போது புதிதாக அறிமுகம் செய்யப்பட உள்ள நானோ யூரியா, நானோ 'டிஏபி' ஆகியவற்றை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும். இவ்வகை உரங்கள் உர செலவை குறைக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்ததாக உள்ளது,'' என்றார்.வாணவராயர் வேளாண் கல்லுாரி உதவி பேராசிரியர் ஸ்வேதா, தொழில்நுட்பம் குறித்தும் பேசுகையில், ''மண்புழு உரம், பண்ணை கழிவு உரம், ரைசோபியம், அசோஸ் பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, 'விஏஎம்' என்ற உயிர் உரம் ஆகியவற்றையும், செயற்கை உரங்களுடன் பயன்படுத்த வேண்டும். அதிகப்படியான தழைச்சத்து இடுவதால் மண்ணின் பூச்சிகளின் தாக்கம் அதிகம் ஏற்படும்,'' என்றார்.கோவை மண் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலர் அருண், மண் நீர் மாதிரி சேகரிப்பு முறைகள், மண் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம், மண்வள அட்டை குறித்து விளக்கி கூறினார்.தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் வசுமதி, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை உதவி அலுவலர் குமார், வேளாண் உதவி அலுவலர் கந்தசாமி ஆகியோர், துறை வாரியான திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து விளக்கினர். உதவி தொழில்நுட்ப மேலாளர் ராதா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ