| ADDED : ஜன 09, 2024 07:57 PM
வால்பாறை;'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, வால்பாறையில் ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பம் மாற்றியமைக்கப்பட்டது.வால்பாறை நகரின் மத்தியில் அமைந்துள்ளது கலைஞர் நகர். இங்கு, 500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், இந்த வழித்தடத்தில் நடந்து செல்லும் நடைபாதையில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட மின் கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்த நிலையில், இப்ப விழுமோ, எப்ப விழுமோ என்ற நிலையில் இருந்தது.பல முறை புகார் தெரிவித்தும் மின்வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. இதுகுறித்து, கடந்த வாரம் 'தினமலர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.இதனையடுத்து, மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு, ஆபத்தான நிலையில் இருந்த மின்கம்பத்தை மாற்றியமைத்தனர். மின்வாரிய அதிகாரிகளின் நடவடிக்கையால் கலைஞர் நகர் மக்கள் நிம்மதியடைந்தனர்.