உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  தொங்கும் மரக்கிளைகளால் விபத்து அபாயம் பெர்க்ஸ் ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்

 தொங்கும் மரக்கிளைகளால் விபத்து அபாயம் பெர்க்ஸ் ரோட்டில் வாகன ஓட்டிகளுக்கு சிக்கல்

கோவை: கோவை--திருச்சி ரோட்டில் இருந்து பெர்க்ஸ் ரோடு வழியாக ஜி.வி., ரெசிடென்சி, மசக்காளிபாளையம், சவுரிபாளையம் மற்றும் அவிநாசி ரோட்டுக்கு பொதுமக்கள் வாகனங்களில் செல்கின்றனர். பெர்க்ஸ் ரோட்டில் பள்ளிகள், கோயில்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஏராளமாக உள்ளன. எந்நேரமும் வாகன போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. பள்ளிகளுக்கு காலை நேரத்தில் மாணவ மாணவியர் வருகை தரும்போது, வகுப்பு முடிந்து வீட்டுக்கு திரும்பிச் செல்லும்போது, இந்த ரோட்டில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. பள்ளி பஸ்கள், கார்கள், டூவீலர்கள், ஆட்டோக்கள் என ஏராளமான வாகனங்கள் குறுக்கும் நெடுக்குமாக பயணிக்கின்றன. இந்த ரோட்டில் அடர்ந்து வளர்ந்த மரங்கள் இருக்கின்றன. அவற்றின் கிளைகள் மிகவும் தாழ்வாக உள்ளன. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தாக இருக்கின்றன. ரோட்டின் ஒரு பகுதியில் பஸ் அல்லது இதர வாகனங்கள் நிற்கும்போது, மீதமுள்ள இடத்தில் வாகன ஓட்டிகள் செல்ல முற்படும்போது, கிளைகளி ல் மோதி விபத்துக்கு உள்ளாகின்றனர். வேகமாகச் செல்வோர் கிளைகளில் தட்டி, கீழே விழுகின்றனர். இத் தகைய ஆபத்தை எச்சரிக்கும் வகையில், வாகன ஓட்டிகளின் கண்களுக்கு மரக்கிளை தெரிவதற்காக, யாரோ ஒருவர், வெள்ளை நிற மற்றும் சிவப்பு நிற துணியை கட்டியுள்ளார். அதைப் பார்த்து வாகன ஓட்டிகள் அவ்விடத்தை கவனமாக கடந்து செல்கின்றனர். இரவு நேரங்களில் இத்துணி வாகன ஓட்டிகளின கண்களுக்குத் தெரிவதில்லை. விபத்து அபாயம் இருப்பதால், இவ்வழித்தடத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள மரக்கிளைகளை மாநகராட்சி அலுவலர்கள் முன்வந்து வெட்டி அகற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை